திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்...யார் யார் எந்தெந்த தேதிகளில் உரையாற்றுகிறார்கள்?

திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்...யார் யார் எந்தெந்த தேதிகளில் உரையாற்றுகிறார்கள்?

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 7 ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி வருகிற 7, 8, 9 ஆகிய  தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய நகர பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதல் நாளான 7-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ள தலைவர்கள் குறித்த முதல் பட்டியல் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம், கண்டோன்மெண்ட் நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். 

இதையும் படிக்க : பிரியாவிடையுடன் தனித்தனித் தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்பாள்...கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்!

தொடர்ந்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும், சென்னை சைதை கிழக்கு பகுதியில் அமைச்சர் மா சுப்பிரமணியனும், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதியில் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

அதேபோல், காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவும், நாகர்கோயில் கிழக்குப் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், சேலம் மேற்கு பகுதியில் கே என் நேருவும், தேனி வடக்கு பகுதியில் ஐ பெரியசாமியும், பொன்முடி -  கடலூர் மேற்கு, ஆ ராசா - நீலகிரி, அந்தியூர் செல்வராஜ் -  ஈரோடு மேற்கு, கனிமொழி - தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.