தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது - பாலகிருஷ்ணன் அறிக்கை

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது - பாலகிருஷ்ணன் அறிக்கை

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளதக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட  ஆளுநர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும்,  நீட் எதிர்ப்பு மசோதாவை  குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை என தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர்  அளிக்கும் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட்  பங்கேற்பதிலை என  முடிவு செய்துள்ளது என பாலக்கிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.