திமுக ஆட்சியை கலைப்பது தான் சரி... நண்பன் கிஷோருக்காக மாரிதாஸ் ஆவேசம்!!

சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

திமுக ஆட்சியை கலைப்பது தான் சரி... நண்பன் கிஷோருக்காக மாரிதாஸ் ஆவேசம்!!
சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனம்  செய்துவரும் கிஷோர் கே.சாமி, இவர் திமுகவை விமர்சிப்பதை முழுநேர வேலையாக செய்து வருகிறார். தொடர்ந்து அக்கட்சியின் தலைவர்களையும் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்து வந்தார்.
 
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
 
திமுக ஐடி பிரிவு சார்பில் அளித்த புகாரினை அடுத்து கிஷோர் கே.சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்தனர். இதனையடுத்து கிஷோர் கே சாமியை 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாபேட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
 
இதுகுறித்து சகா யூடுயூபர் மாரிதாஸ் தனது த்விட்டேர் பக்கத்தில்... திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார்.சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி... கிஷோர் கே சாமிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.