உலக இருதய தினம்: மினி மாரத்தான் போட்டி...உறுதி மொழி ஏற்ற போட்டியாளர்கள்!

உலக இருதய தினம்: மினி மாரத்தான் போட்டி...உறுதி மொழி ஏற்ற போட்டியாளர்கள்!

நெல்லையில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு குறித்த மினி மராத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மினி மாரத்தான் போட்டி:

உலக இருதய தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெல்லையில் தனியார் மருத்துவமனை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க: “நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்” நிச்சயம்...கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு!

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு:

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, கலெக்டர் பங்களா, சேவியர் கல்லூரி வழியாக சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து போட்டியின் முடிவில், அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

உறுதிமொழி ஏற்பு:

முன்னதாக, மாரத்தானில் பங்கேற்றவர்கள் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.