கூட்டம் களை கட்டிய மந்தவெளி அம்மன் கோவில் தீமிதி திருவிழா!

மந்தவெளி அம்மன் கோவிலில் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம் செய்தனர்.

கூட்டம் களை கட்டிய மந்தவெளி அம்மன் கோவில் தீமிதி திருவிழா!

ஆடி மாதம் முழுவதும் அம்மன்களுக்கான மாதமாக இருக்க, தொடர்ந்து தமிழகத்தின் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது, தீ மிதி திருவிழா போன்ற கோலாகல கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. அவ்வகையில், திருவள்ளூரை அடுத்த கொண்டஞ்சேரி பகுதியில் உள்ள அருள்மிகு மந்தவெளி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது.

கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த ஆடி மாத கொண்டாட்டங்கள், இக்கோவிலில், 12ம் ஆண்டாக இந்த வருடம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

எப்போதும் போல, இந்த வருடமும் காப்பு கட்டி விரதம் பக்தர்கள் இருந்தனர். மற்றும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள், தீபாராதனை, ஊர்வலங்கள், கூழ வார்த்தல் ஆகியவையும் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் 7 ஊர் எல்லைகளுக்குள் சென்று ஊர்வலமாக வந்தனர். மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில், அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதிவுலா வந்தார்.

இன்று காலை, அம்மன் ஆலயத்தின் முன் தீக்குண்டம் ஏற்படுத்தப்பட்டு, காப்பு கட்டிய ப்கதர்கள், கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் சிலர், தீ மிதித்து அம்மனை தரிசித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்றிரவு, அம்மனுக்கு படையல் போட்டு, பக்தர்களுக்கு பிர்சாதம் வழங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.