திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி முகநூலில் பதிவிட்டதை தட்டி கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.

திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூடக்கரையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கூடக்கரை பகுதி திமுக நிர்வாகியாக உள்ளார். இதற்கிடையில் இன்று சுப்பிரமணியம் கூடக்கரையில் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சுப்பிரமணியத்திடம் தகராறு செய்ததுடன்  தமிழக முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் குறித்து தரக்குறைவாக பேசியதுடன் அதை முகநூல் பக்கத்திலும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது..

அதனை சுப்பிரமணியம் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் இரும்பு கொக்கியால் சுப்பிரமணியத்தை தாக்க முயற்சித்ததுடன் அவருக்கு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியம் கடத்தூர் காவல் நிலையம் சென்று தமிழக முதல்வர் பற்றி அவதூறாக பேசியது மட்டுமின்றி அதனை தட்டி கேட்ட தனக்கும் கொலைமிரட்டல் விட்டதாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்தபுகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து சுரேசை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.