கடலூரில் மானை வேட்டையாடிய நபர் கைது...!

கடலூரில் மானை வேட்டையாடிய நபர் கைது...!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நாட்டு துப்பாக்கியால் மானை வேட்டையாடி கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சுற்றுவட்டார பகுதிகளில் மான், முயல் உள்ளிட்ட காட்டுவிலங்குகள்  வேட்டையாடப்படுவதாக, வனத்துறை அலுவலர்களுக்கு புகார்வந்த வண்ணம் இருந்துள்ளது.

அதனைதொடர்ந்து ரகசிய தகவலின் அடிப்படையில்,  வேப்பூர் பகுதியில், வனத்துறை அதிகாரிகள் நேற்று இரவு ரோந்துபணியில்ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேப்பூரில் உள்ளகாட்டுப் பகுதியில், மூன்று நபர்கள், தலையில் லைட்டுடன், நாட்டுத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு, மானைவேட்டையாடி, தூக்கி வருவதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், அவர்களை சுற்றிவளைத்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகளை கண்டதும், மூன்று பேரும் தப்பிக்க முயற்சித்துள்ளனர். அவர்களை வனத்துறை அதிகாரிகள், துரத்திய போது இரண்டு பேர் தப்பித்த நிலையில்,  ஒருவரை மட்டும் சினிமா பட பாணியில் அதிகாரிகள் துரத்தி பிடித்து கைது செய்தனர். 

பின்னர் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா இறையூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் மகன் யாகோப் என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட மான், உள்ளிட்டவைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதையும் படிக்க     | தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல... சென்னை உயர்நீதிமன்றம்!!

மேலும் தப்பியோடி தலைமறைவாகியுள்ள, இறையூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் குழந்தைசாமி (வயது 40),  மற்றும் ஜோசப்ராஜை  தீவிரமாக தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட யாக்கோப்பு மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க     | 4ஜி இணைய சேவையை கைப்பற்றிய டாடா நிறுவனம்...!!