இணையவழியில் மாஞ்சா நூல், காற்றாடி வாங்கி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது...

சென்னையில் இணையவழியில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல்கள் வாங்கி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இணையவழியில் மாஞ்சா நூல், காற்றாடி வாங்கி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது...

சென்னை திருவொற்றியூரில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் பரத் குமார் என்பவர், கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி கழுத்து அறுபட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவங்கள அடிக்கடி நிகழ்ந்து வருவதால், மாஞ்சா நூலை பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்திருந்தது. இதற்கிடையில் தடையையும் மீறி சில இடங்களில் மாஞ்சா நூல் விற்பனை நடைபெறுகிறா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றர். அதன்படி மாஞ்சா நூலால் விபத்து நடைபெற்ற மஸ்தான் கோயில் பகுதியில் போலீசார் சோதனை மேற்க்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் இணையவழியில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல்கலை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனைதொடர்ந்து அவரிடமிருந்த 40க்கும் மேற்ப்பட்ட காற்றாடிகள், லொட்டாய்கள், மாஞ்சா நூல்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.