மல பயந்துட்டியா மல!!!!! திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு

கோவையில் கைக்கடிகார படத்துடன் ’ டிக் டிக் டிக்.. பயந்துட்டியா மல” என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மல  பயந்துட்டியா மல!!!!!      திமுகவினரின்  போஸ்டரால்  பரபரப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில்செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்கையில்கட்டியுள்ள கைக்கடிகாரம்கொண்டு தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரம் அது எனவும் அதனை கட்டி இருப்பதால் தான் ஒரு தேசியவாதி எனவும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். சுமார் 5
லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கடிகாரம் குறித்து அண்ணாமலை தெரிவித்த
கருத்து தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. இதனிடையே இந்த
கைக்கடிகாரம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்த தமிழக
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த கைக்கடிகாரம் வாங்கியதற்கான
விற்பனை பில்லை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக
சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் கோவையில்
தி முகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சிக்கிம்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்...16 பேர் உயிரிழப்பு


கைக்கடிகாரத்தின் புகைப்படத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
அமைச்சர்கள் உதயநிதி, செந்தில் பாலாஜி ஆகியோரின் படங்களும் இடம்
பெற்றுள்ள இந்த போஸ்டரில் ’டிக் டிக் டிக்... பயந்துட்டியா மல’ என்ற
வாசகங்கள் அடங்கியுள்ளது. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலைய சந்திப்பு
மற்றும் உப்பிலிபாளையம் பகுதிகளில் பிரம்மாண்ட அளவில் ஒட்டப்பட்டுள்ளது.
தற்போது இந்த போஸ்டர்கள் கோவை மாநகர மக்களிடையே பேசு பொருளாக மாறி
உள்ளது. இதனிடையே போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்பாக நீதிமன்றம் கூறிய
விதி முறைகளை மீறி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் சமூக
வலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது

மேலும் படிக்க | தி முகவின் பொங்கல் பரிசு ஒரு ஏமாற்று வேலை அண்ணாமலையின் அதிரடி அறிக்கை

கோவையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தி. மு.க.வினர் ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.  ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கைக் கடிகாரத்தை அணிந்திருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தது அரசியல் களத்தில் விவாதம் உருவாகியது. இதனிடையே கோவை நகரில் தி. மு.க.வினர் ஒட்டியுள்ள போஸ்டரில் அண்ணாமலையின் புகைப்படம் மற்றும் கடிகாரத்தையும் போட்டு அதன் அருகே டிக் டிக் டிக்.. பயந்துட்டியா மல.. என்ற வாசகத்தை இடம் பெறச் செய்தனர். தி. மு.க.விடம் கடிகாரத்தால் சிக்கிக் கொண்டதை மனதில் வைத்து ஒட்டிய இந்த போஸ்டர் விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.