வசமாக சிக்கிய மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி வாத்தி... கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமுதா தலைமையில் விசாரணை...

வசமாக சிக்கிய மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி வாத்தி...  கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமுதா தலைமையில் விசாரணை...

மஹரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல்  ஆசிரியர் ஆனந்தன் மீது நேரடி புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் எழுந்த குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

 சென்னை கே.கே நகர் பதம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான விசாரணை காவல்துறை தரப்பில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியரும் பாலியர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அந்த பள்ளியின் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கு வணிகவியல் பாடம் எடுத்துவரும் ஆசிரியரான ஆனந்தன் மீது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டுள்ளதாகவும், பல்வேறு வகையில் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.  

இந்நிலையில் ஏற்கனவே மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் சார்பில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பள்ளி நிர்வாகம் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை துவங்கியுள்ள நிலையில் வணிகவியல் ஆசிரியரான ஆனந்தன் என்பவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் ஆனந்தன் மீது தற்போது வரை நேரடி புகார்கள் ஏதும் காவல்துறை மூலம் பெறப்படவில்லை என்றாலும்,காவல்துறை தரப்பில் சமூக வலைதளங்களில் எழுந்த குற்றச்சாட்டை முன்வைத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் முன்வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அப்புகாரின் அடிப்படையில் காவல்துறை சார்பில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.