புரட்டாசி மாத மஹாலய அமாவாசை....! குவியும் பக்தர்கள் கூட்டம்..! எந்த கோவில்..?

புரட்டாசி மாத மஹாலய அமாவாசையை முன்னிட்டு கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

புரட்டாசி மாத மஹாலய அமாவாசை....! குவியும் பக்தர்கள் கூட்டம்..! எந்த கோவில்..?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும் சதுரகிரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மஹாலய அமாவாசையை முன்னிட்டும், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.

இன்று மகாலய அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தற்போது மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தும் வருகின்றனர்.