"மகா சிவராத்திரி விழா".. தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்து வரும் பக்தர்கள்

சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

"மகா சிவராத்திரி விழா".. தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்து வரும் பக்தர்கள்

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விரத நாளாகும். இந்த தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கி, நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில், மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று  வருகிறது. அதன் ஒருபகுதியாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.