மகா சிவராத்திரி பெருவிழா: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள சிவன் கோவில்களில் திரளாக குவிந்து வரும் பக்தர்கள்!

மாகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

மகா சிவராத்திரி பெருவிழா: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள சிவன் கோவில்களில் திரளாக குவிந்து வரும் பக்தர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசத்தி பெற்ற மகாதேவர் கோவிலில் 1008 சங்குகளால் நெல்மணியில் வரையப்பட்ட நந்தி உருவம்- சிறப்பு யாகங்கள் மூலம் சிவராத்திரி பூஜை-மேலும் சிவன் கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு-சிவராத்திரியை முன்னிட்டு 5 கால பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம்  வடசேரி  மகாதேவர் ஆலயத்தில்  1,008 சங்குகள் மற்றும் நெல்மணிகளால் நந்தியின் உருவம் உருவாக்கப்பட்டு சிறப்பு  பூஜை நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா சிறப்பு பூஜைகளில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்து அவர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  

இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த காம்பார்பட்டியில் உள்ள மாதா புவனேஸ்வரி அம்மன் உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் கோவிலில் 1,008 சிவலிங்க  மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  வேத மந்திரங்கள் முழங்க, கருடன் வானில் வட்டமிட புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. நிகழ்வில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.