'ஆசிய-பசிபிக் பளு தூக்கும் போட்டி' தங்கம் வென்ற மதுரைக்காரர்!

'ஆசிய-பசிபிக் பளு தூக்கும் போட்டி' தங்கம் வென்ற மதுரைக்காரர்!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பளு தூக்கும் போட்டியில் மதுரையை சேர்ந்த வீரர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் கடந்த மே 12 முதல் மே 20 வரை நடைபெற்ற 'ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ்' போட்டி நடைபெற்றது. இதில் பளு தூக்கும் பிரிவில் மதுரையை சேர்ந்த கார்த்திகேயன்  என்பவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

இந்நிலையில், நேற்று தென் கொரியாவில் இருந்து டெல்லி மார்க்கமாக சென்னை விமான நிலையம் வந்த கார்த்திகேயனுக்கு பி.எஸ்.என்.எல் நிர்வாகிகள்  மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் கேம்ஸ் 2023 நடைபெற்றது. இந்த போட்டியில் 56 நாடுகளில் இருந்து 12500  வீரர்கள் பங்கேற்றனர் மேலும் இந்தியாவிலிருந்து 35 பேர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த நான் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பலு தூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டேன். அதில் 102 கிலோ எடை பிரிவில்  தங்கப்பதக்கத்தை வென்றேன் என தெரிவித்தார்.

மேலும், விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் சாதிக்க வேண்டுமென்றால் அரசு உதவி செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த அவர், அப்போது தான் இதுபோல பல பதக்கங்களை வென்று இளைஞர்கள்  சாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!