மதுரை எய்ம்ஸ் தொடர்பான பதிலுக்கு எதிர்ப்பு...வெளிநடப்பு செய்த திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள்!

மதுரை எய்ம்ஸ் தொடர்பான பதிலுக்கு எதிர்ப்பு...வெளிநடப்பு செய்த திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள்!

மதுரை எய்ம்ஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.


மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்றைய அவை தொடங்குவதற்குமுன், பிஎஃப் ஓய்வூதியம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி மாதந்தோறும் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி, காந்தி சிலைமுன் இடதுசாரி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க : AC மயமாகும் புறநகர் ரயில்கள் - ஒப்பந்தப்புள்ளி கால அவகாசம் நீட்டிப்பு...!

தொடர்ந்து மாநிலங்களவை தொடங்கிய நிலையில், ராகுல்காந்தி மற்றும் கார்கேவின் நீக்கப்பட்ட வார்த்தைகளை அவைக்குறிப்பில் சேர்க்குமாறு காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர், உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

இதற்கிடையில் மக்களவையில் மதுரை எய்ம்ஸ் தொடர்பான கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளித்தார்.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள், மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.