சோத்துக்கே வழியில்ல பேங்க் அக்கவுண்ட் ரிலீஸ் பண்ணி விடுங்கய்யா...குட்டிக்கரணம் போடும் பப்ஜி மதன் மனைவி

அன்றாட வாழ்க்கைக்கு கூட காசு இல்லாமல் சிரமப்படுவதாகவும் தன்னுடைய வங்கி கணக்கை திறக்க வேண்டும் எனவும் கோரி வைத்துள்ளார் பப்ஜி மதன் மனைவி கிருத்திகா.

சோத்துக்கே வழியில்ல பேங்க் அக்கவுண்ட் ரிலீஸ் பண்ணி விடுங்கய்யா...குட்டிக்கரணம் போடும் பப்ஜி மதன் மனைவி

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்தவர் மதன்.. இந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி நிறைய பண மோசடிகளிலும் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து, மதனும், அவரது மனைவி கிருத்திகாவும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. மதன், கிருத்திகா மீதான குற்றப் பத்திரிகையை சைதாப்பேட்டை கோர்ட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்திருந்தனர்.

மதன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வைத்தனர். கொரோனா காலத்தில் உதவி செய்வதாக  கூறி ரூ.2 கோடியே 89 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக சரமாரியாக குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட 3000 பேரை ஏமாற்றி பணம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். அதேபோல, மதனின் மனைவி கிருத்திகாவை 2-வது குற்றவாளியாக இந்த வழக்கில் போலீஸார் சேர்த்தனர்.

கிருத்திகா தற்போது ஜாமீனில் உள்ளார். ஆனால், மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிருத்திக்கா,  கடந்த 10 ஆண்டுகளாக தாங்கள் சொத்துக்கள் எதுவும் வாங்கவில்லை என்றும், சொகுசு கார்கள் என் பெயரிலும் அவரின் பெயரிலும் இல்லை என்றும், அதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள், ஆடி ஏ6 கார் மட்டும்தான் மதன் வைத்திருக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

வாடகை வீட்டில்தான் வசித்து வருவதாகவும், தங்களது யூடியூப் சேனலை முடக்கிவிட்டதாலும், டெபிட் கார்டு, வங்கி கணக்கு, வீட்டின் சாவி எல்லாம் போலீஸாரிடம்தான் இருப்பதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தன்னுடைய வங்கிக்கணக்கை திறக்க உத்தரவிடக்கோரி, கிருத்திகா சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு சாப்பாட்டுக்குகூட வழியில்லை, வாழ்வாதாரமே சிரமமாக உள்ளதால், தன்னுடைய வங்கி கணக்கை திறக்க வேண்டும் என்றும், அதற்கான உத்தரவை சைதாப்பேட்டை வங்கிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கிருத்திகாவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி, சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.