எம்ஆர்பி செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனா தடுப்புப் பணி செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எம்ஆர்பி செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தடுப்பூசி செலுத்தியதால் பாதிக்கப்பட்ட இரு பெண் குழந்தைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் காந்தி ஆகியோர் நேரில் சென்று பார்த்து நிவாரணம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன்,  கொரோனா தொற்று பரவல் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் வேலையை விட்டு நிறுத்தி விட்டன என்றார். குறிப்பாக கேரளாவில் அனைத்து பேரிடர் காலங்களில் பணி செய்த அனைவரும் நீக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால், தொற்று  காலத்தில் தன்னுயிரை பொருட்படுத்தாமல் பணி செய்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய முதல்வர் முடிவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 4 ஆயிரத்து 848 செவிலியர்களில் இதுவரை இரணடாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.