கொரோனா 2வது அலை பரவக்காரணம் அதிமுக தான்- ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

கொரோனா 2வது அலை பரவக்காரணம் அதிமுக தான்-  ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய முந்தைய அரசு தான் 2வது அலைக்கு காரணம்- முதல்வர் குற்றச்சாட்டு!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய முந்தைய அரசு தான் கொரோனாவின் 2வது அலைக்கு காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன்பின் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தீவிர ஊரடங்கிற்கு பலன் கிடைக்க துவங்கியுள்ளதாகவும், கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், முந்தைய அதிமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால் தான், கொரோனா 2வது அலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலையை முற்றிலும் ஒழித்து திமுக அரசு வெற்றிப்பெறும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.