உள்ளாட்சி  தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...

ஊரக உள்ளாட்சி  தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்  மு.க.ஸ்டாலின் அறிவுறு்ததி உள்ளார்..

உள்ளாட்சி  தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...

உள்ளாட்சித் தேர்தலின் போது விடுப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி , வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக , திமுக மாவட்ட நிர்வாகிகளுடன்  , அக்கட்சியின் தலைவரும் , முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்  ஆலோசனை நடத்தினார்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில். 9 மாவட்ட திமுக நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் , ஒன்றிய செயலாளர்கள் , பங்கேற்றனர். கூட்டத்தில் இளைஞர்கள் பெண்கள், கட்சிப் பணியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து பேசிய நெல்லை மாவட்ட திமுகவினர் உள்ளாட்சித் தேர்தலில் திமுக  வெற்றி பெற வேண்டுமென்றால்  கடந்த ஆட்சி காலத்தில்  நியமிக்கப்பட்ட அரசு  அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் கூட்டத்தில்  பேசிய மு.க.ஸ்டாலின்,  ஊரக உள்ளாட்சி  தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.