ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு.. இசையமைத்தவருக்கு முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்!

”ஸ்டாலின் தான் வாராரு” என்ற பாடலுக்கு இசையமைத்து பிரபலமான ஜெரார்டு பெலிக்ஸ் - பிரேஷி சாந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று  மணமக்களை வாழ்த்தினார்.

ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு.. இசையமைத்தவருக்கு முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்!

பிரபல இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் பிரேஷி சாந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில்,‘ஸ்டாலின் தான் வாராரு.... விடியல் தரப் போறாரு’ என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இசையமைத்து பிரபலமானவர்.

இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இந்தப் பாடலை பாடியிருந்தார். 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை வழங்கி மணமக்களை வாழ்த்தினர்