பத்துக்குப் பத்தும் அடித்து தூக்கியது...இதற்கெல்லாம் அவங்க தான் காரணம்!! ஸ்டாலின் அனுப்பிய அந்த டீம்

பத்துக்குப் பத்தும் அடித்து தூக்கியது...இதற்கெல்லாம் அவங்க தான் காரணம்!! ஸ்டாலின் அனுப்பிய அந்த டீம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தாலும், கொங்குமண்டலத்தை பொறுத்தவரை திமுக பயங்கர வீக்காக இருக்கிறது. கொங்குமண்டலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களிலுள்ள 50 தொகுதிகளில் 33 தொகுதிகளில் அதிமுக தான் ஜெயித்தது  திமுகவெறும் 17 தொகுதிகளில்தான் ஜெயித்தது. அதிலும் சேலத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளிலும், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் பத்துக்குப் பத்தும் அடித்து தூக்கியது அதிமுக. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் இந்த மெகா வெற்றிக்கான காரணம் கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பொறுப்பு அமைச்சராக இருந்த வேலுமணிதான். 
 
கோவையில் பத்துக்குப் பத்து தொகுதிகளும் திமுக கூட்டணி வாஷ் அவுட் ஆனதற்கான காரணம் தேடி திமுக தலைமைக் கழக சட்டத்துறை ஆலோசகர் என்.ஆர். இளங்கோவின் குழுவினரை கோவைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டாலின். அவர்கள் கோவையில் முகாமிட்டு திமுக நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் தெரியாமலேயே கோவை வாஷ் அவுட்டுக்கான காரணங்களை விசாரித்து அறிந்து வருகின்றனர்.
 
கோவை திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்பில் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் பறந்தது. தொண்டர்கள் கொடுத்த புகார்கள் அடிப்படையில், வேலுமணியுடன் தொடர்பில் இருக்கும் திமுக நிர்வாகிகள் யார் யார், தேர்தல் உள்ளடி வேலைகள் செய்யாமல் இருந்தவர்கள் யார்,  தலைமை கொடுத்த நிதியை முழுமையாகக் கொண்டு சேர்க்காதவர்கள் யார் யார் என்பது குறித்த முழு விவரங்களையும் திரட்டியுள்ள அந்தக் குழுவினர் ஜூன் 10 ஆம் தேதி வாக்கில் திமுக தலைவரிடம் தனது அறிக்கையை அளிப்பார்கள் என்று அறிவாலய வட்டாரத்தில் சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் கொங்கு மண்டலத்துக்கு குறிப்பாக கோவை மாவட்டத்துக்கு தலைமைக் கழகம் சார்பில் பொறுப்பாளர் நியமிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.