75வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்...

சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நினைவு தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பை அடுத்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டது.

மேலும், அதற்கான டெண்டர் விடப்பட்டு, 1கோடியே 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 3-ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது.  முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. நினைவுத் தூணின் அடித்தளம் 10 அடி நீளத்திலும், 10 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 55 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தின நினைவு தூணில் பஞ்சலோகத்தால் ஆன அசோக சக்கரம் மற்றும் 4 தலையுடன் கூடிய சிங்க முகம் செய்யப்பட்டு பொருத்தப் பட்டுள்ளது. இந்த நினைவுத்தூணை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.