முதலமைச்சராக முதன் முதலில் கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினர் வாகனங்கள் புடைசூழ வருகை புரிந்தார். அவருக்கு தலைமை செயலாளர் இரையன்பு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட முதலமைச்சர், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர்  சுதந்திர தின விழா உரையாற்றினார். அப்போது சுதந்திர தினவிழா அன்று முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி என நினைவு கூர்ந்தார். சுதந்திர நினைவுத்தூண் தியாகிகளின் ரத்தத்தாலும், சதையினாலும் எழுப்பப்பட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமாக பெசிய அவர், கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பு தந்த தமிழக மக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்.