லீ மெரிடியன் சொத்துக்களை எம்.ஜி.எம் நிறுவனம் எடுத்துக்கொள்ள தடை...

சென்னை லீ மெரிடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் எடுத்துக்கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

லீ மெரிடியன் சொத்துக்களை எம்.ஜி.எம் நிறுவனம் எடுத்துக்கொள்ள தடை...

தமிழகம் முழுவதும் அப்பு ஹோட்டல் என்ற பெயரில் லீ மெரிடியன் ஹோட்டல் நிர்வாகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஹோட்டல்கள் நஷ்டமடைந்ததால் திவாலாகும் நிலை ஏற்பட்டது. எனவே ஹோட்டலின் சொத்துகளை விற்க முடிவு செய்து சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத்திற்கு 423 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை ஒப்புதல் அளித்துள்ளது. 

ஆனால் லீ மெரிடியன் ஹோட்டலின் சொத்து மதிப்பு 1600 கோடி ரூபாய் என்பதால் இந்த உத்தரவை எதிர்த்து கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் லீ மெரிடியன் இயக்குனர் பழனி பெரியசாமி மேல்முறையீடு செய்தார். அதில், சொத்து மதிப்பீடு தவறாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும், சுமார் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதை எதிர்த்து வாதிட்டார்.  

இருதரப்பு வாதங்களை கேட்ட கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ஏற்கனவே மதிப்பிடப்பட்ட 423 ரூபாய் கோடி மதிப்பிலான சொத்துக்களை எடுத்துக்கொள்வதற்கான உத்தரவுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.