மருத்துவமனை வாசலில் படுக்கும் அவலம்.. அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அவதி...

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் பேர் வெளி நோயாளிகளாகவும், மூன்றாயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறனர்.

மருத்துவமனை வாசலில் படுக்கும் அவலம்.. அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அவதி...

கண், இருதயம், நரம்பியல், எலும்புமுறிவு, பொது நல பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 16பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக மருத்துவமனையில் தாய்சேய் நல சிகிச்சை பிரிவில் பிரசவத்திற்க்காக வரும் பெண்கள் உடன் பெற்றோர்கள், உறவினர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு இடமில்லாமல் சிகிச்சை பிரிவு வளாகத்திலேயே சாலையில் படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்கு கொசு கடியிலும், விஷ பூச்சிகளின் அச்சத்திலும் மக்கள் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களை சந்திக்க பெற்றோர்கள், உறவினர்கள் என கூட்டம் கூட்டமாக இரவு நேரங்களில் அருகருகே படுத்திருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு இரவு நேரங்களில் தங்கக்கூடிய பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே மருத்துவ நிர்வாகம் இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு தனி அறை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.