மரம் வெட்டும் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை...வழக்கு நடத்த செலவுக்கு பணம் இல்லாத காரணமா ? போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மரம் வெட்டும் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரம் வெட்டும் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை...வழக்கு நடத்த செலவுக்கு பணம் இல்லாத காரணமா ? போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். மரம் வெட்டும் தொழிலாளியான இவர் மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவரது வீட்டின் கதவு திறக்கப் படாததால் சந்தேகமடைந்த  அப்பகுதியினர், இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு தூக்கில் பிணமாக தொங்கிகொண்டிருந்த சண்முகத்தின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சண்முகம் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக வழக்கு தொடரப்பட்டு கைதாகி ஜாமினில் வெளியே வந்தநிலையில்,

மேற்க்கொண்டு வழக்கு நடத்த போதிய வருவாயின்றி தவித்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.