மக்களே உஷார்...குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...தேதி இதோ!

மக்களே உஷார்...குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...தேதி இதோ!

வரும் 9 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்:

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதாக கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் 12 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாகவும் அதிகபட்சமாக சென்னை தண்டையார் பேட்டையில் 14 செண்டிமீட்டர் கனமழையும், சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்தில் தலா 12 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க: ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை அதிரடி உயர்வு...விளக்கமளிக்கும் அமைச்சர்!

தமிழகத்தில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து தற்போது கேரள பகுதியின் மீது நிலவுவதால் அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறினார். 

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமுதல், மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் பாலசந்திரன் தெரிவித்தார். மேலும், வரும் 9 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார.