காதல் ஜோடிகள்... 13 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம்.. 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்!!

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடிகள்... 13 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம்..  9 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்!!

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே எதுமலை கிராமத்தை சேர்ந்த செல்ல பாப்பா என்பவருக்கு ரமேஷ், ஜெகதீசன் என இரு மகன்கள் உள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெகதீசன், கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் கூட ஊர் மக்கள் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  மாசி பெரியண்ணசாமி கோவில் திருவிழாவின்போது அவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்யாமல் தவிர்த்ததாகவும், கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ரமேஷ் சிறுகனூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து கடந்த 15ஆம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அவர்கள் தங்களது கருத்தில் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து, ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சின்னச்சாமி, மாயவன், சிவலிங்கம் உள்ளிட்ட 9 பேர் மீது குடிமையியல் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ், 120 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் வழிபட எங்களுக்கு உரிமை இருந்தும், எனது சகோதரர் காதல் திருமணம் செய்துகொண்டதால் விழாவில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என கூறினார். இதனையடுத்து கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டும் என கேட்டுகொண்டார்.