எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறைகள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் பராமரிப்பு பணிகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறைகள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னையில் சுற்றுலாத் தளங்கள் பல்வேறு இருந்தாலும், பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் வருகைத்தர நினைப்பது மெரினா கடற்கரைக்கு தான். ஒவ்வொரு முறை மெரினாவுக்கு வருகைத் தருபவர்கள் நிச்சயமாக அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் சமாதிக்கு பார்வையிட செல்வது வாடிக்கையான ஒன்று. சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆரின் நினைவிடமும், ஜெயலலிதாவின் நினைவிடமும் ஒரு பகுதியிலும், அண்ணாதுரையின் நினைவிடமும் மு.கருணாநிதியின் நினைவிடமும் வேறு ஒரு பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இவ்விரண்டு பகுதிகளுக்கும் பார்வையிட சென்றால் பெரிய வித்தியாசத்தை உணர முடியும்.

ஏனென்றால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் உள்ள செயற்கை குளம் பராமரிப்பு இல்லாமல்  பாசி பிடித்து, தேவையற்ற பொருட்கள் நிறைந்து தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், செடிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நீர்தெளிப்பான் வசதி பராமரிப்பு போதிய அளவிற்கு இல்லாமல் இருப்பதால், செடிகளுக்கு நீரூற்ற வைக்கப்பட்டிருக்கும் குழாய் பொதுமக்கள் செல்லும் இடத்தில் நீர்பாய்ச்சுவது, போகும் வழியும் மற்றும் திரும்பும் வழியும் ஒரே பாதையில் அமைத்திருப்பது, செயற்கை குளம் பராமரிக்காமல் வைத்திருப்பது போன்றவை, நினைவிடத்திற்கு வரும் மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

மேலும், ஜெயலலிதா நினைவிடம் அருகே உள்ள அருங்காட்சியகம், அறிவுசார் நூலகம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10. 00 மணிமுதல், மாலை 5.30 மணிவரை மட்டும் திறக்கப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ஜெயலலிதா அருங்காட்சியகத்தில் உள்ளே புறாக்கள் வரும் அளவிற்கு பெரிய வழி இருக்கிறது.

இதனால், அருங்காட்சியகம் முழுவதையும் புறாக்கள் அசுத்தம் செய்கிறது. மழை பெய்யும் நேரத்தில் அருங்காட்சியகத்திற்கு  மழைநீர் உள்ளே வருகிறது. மேலும், அருங்காட்சியகம், அறிவுசார் நூலகம் இரண்டிலும் குளிர்சாதனம் பழுது ஏற்பட்டுள்ளதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஜெயலலிதா நினைவிடம் வெளியே கழிப்பிடம் அமைந்துள்ளது. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திறக்காமல் பூட்டியிருக்கிறது. இதனால், நினைவிடத்தை பார்வையிட வரும் பெண்கள், அங்கு பாாதுகாப்ப பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் குறிப்பாக பெரிதும்பாதிக்கப்படுகின்றனர். எனவே, முறையாக கழுப்பிடத்தை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.