உள்ளாட்சித் தேர்தல்- அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை ....

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக  சீட் பங்கீடு குறித்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ். தலைமையில் இரண்டாம் கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது.  

உள்ளாட்சித் தேர்தல்- அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை ....

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் தொடங்கிய முதல்கட்ட பேச்சுவார்த்தையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக போட்டியிடும் இடங்கள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் அதிமுக சார்பில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் பாஜக சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் பலராமன், ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவாரத்தைக்கு  பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்த கரு. நாகராஜன், சீட் ஒதுக்கீடு பேச்சு சுமூகமான முறையில்  நடந்ததாக கூறினார்.

இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில், மற்ற பிற மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் யார் யார் போட்டியிடுவது என்பது குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.