உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: நேர்மையாக நடத்த அறிவுறுத்தி வழக்கு முடித்து வைப்பு...

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை நேர்மையாக நடத்த அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: நேர்மையாக நடத்த அறிவுறுத்தி வழக்கு முடித்து வைப்பு...

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் 20 சதவீத வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும் என்றும், பதட்டமான வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா, இணையதள நேரலை வசதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், ரகசியமாக செயல்படக் கூடிய தேர்தல் பார்வையாளர்களை அடையாளப்படுத்த முடியாது எனவும், முடிந்த அளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் அதிகாரிகள் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.