5 ஆயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் கேள்வி.. தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்.. என்ன காரணம்.. எங்கு?

மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டால் கிருஷ்ணகிரி  மாவட்டத்தில்  5 ஆயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகி உள்ளது.

5 ஆயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் கேள்வி..   தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்.. என்ன காரணம்.. எங்கு?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருபத்தி ஏழு தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் 50 சதவீத மகளிர் உட்பட 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தீப்பெட்டி தயாரிக்க தேவையான மூலப் பொருட்களான பொட்டாசியம் குளோரைடு, மெழுகு, அட்டைகள் உள்ளிட்டவை கடந்த 6 மாதத்தில் மட்டும் 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை விலை உயர்ந்து உள்ளது.

இதனால் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் உற்பத்தி செய்ய இயலாமலும் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பணி வழங்க இயலாமலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தீப்பெட்டியின் விற்பனை விலையை காட்டிலும் உற்பத்தி செலவு தற்போது அதிகமாக உள்ளதால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழலுக்கு உரிமையாளர்கள்  தள்ளபட்டுள்ளனர். தீப்பெட்டி தொழிற்சாலை மூடப்பட்டால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 5000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

எனவே அரசு தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்கள் தடையில்லாமலும் உரிய விலையில் கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மூலப்பொருள்கள் விலை உயர்வு காரணமாக தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன.  இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்திலும்  17ம் தேதி வரை  தீப்பெட்டி  ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ள தீப்பெட்டி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தவது குறித்து ஆலோசித்து  வருகின்றனர்.