தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு மதுக்கடைகள் இயங்காது!!

தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 19ம் தேதி வரை 3 நாட்களுக்கு மதுக்கடைகள் இயங்காது!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் மதுக்கடைகள் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு இன்று முதல் அமலாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மதுக்கடைகள் இன்று முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் மூடப்படுகிறது.

இதேபோன்று வரும் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது மதுக்கடைகள் இயங்காது. இந்த அறிவிப்பால் நேற்று அதிகளவிலான மதுப்பிரியர்கள் மதுக்கடைகளில் திரண்டனர்.

தினமும் சராசரியாக 80 கோடிக்கு மது விற்பனையாவது வழக்கம். ஆனால் 3 நாட்கள் கடைகள் மூடப்படுவதால் நேற்று ஒரே நாளில் 200 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.