கடமைக்கு 'கடையை’ மூடுவோம் :  கள்ளச் சந்தையில் ’கல்லா’ கட்டுவோம்!!

சுதந்திர தினத்தை சற்றும் பொருட்படுத்தாமல்  கள்ள சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

கடமைக்கு 'கடையை’ மூடுவோம் :  கள்ளச் சந்தையில் ’கல்லா’ கட்டுவோம்!!

75வது சுதந்திர தினம்

நேற்று நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மது கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்தது. ஆனால் தமிழகம் முழுவதும் பரவலாக கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடந்தது. குறிப்பாக ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித அச்சமும் இன்றி மது விற்பனை தாராளமாக நடைபெற்றது.

கள்ளச்சந்தையில் மது

திருமுல்லைவாயல் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான   கடை பாரில் உள்ள சிலர் புதிய யுத்திகளை கையாண்டு  கள்ள சந்தையில் மது விற்பனை செய்தனர். மது பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்ய கைப்பை முழுவதும் மது பாட்டில்களை நிரப்பி கொண்டு வந்து 140க்கு விற்கப்படும் மதுபாட்டில்களை 250 ரூபாய் என விற்று காசு பார்த்தனர்.

போட்டா போட்டி

மேலும் இதனை வாங்க குடிமகன்கள் நான் நீ என போட்டி போட்டுகொண்டு ஏலம் எடுப்பது போன்று முண்டியடித்து வாங்கி சென்றனர். மேலும் மதுபானங்கள் விற்று தீர்ந்த பின்னர்  மீண்டும் சென்று மதுவை நிரப்பிக்கொண்டு மறுபடியும் வந்து விற்பனை செய்தனர். 

கண்டு கொள்ளாத காவல்துறை

கடமைக்கு மது கடையை மூடிவிட்டு சர்வ சாதாரணமாக மது விற்பனை நடைபெற்றதை அம்பத்தூர் மது விலக்கு அமலாக்க காவல் துறையினர் கண்டு கொள்ளவே இல்லை என புகார் எழுந்துள்ளது.