நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்...திருமாவளவன்.!!

வரும்காலங்களில் மறைமுக தேர்தல் இல்லாமல், மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்...திருமாவளவன்.!!

சென்னை செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், கூறுகையில்,

மறைமுக தேர்தலில் பல குளறுபடிகள் நடைபெற்றது. அதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்றோம். இந்நிலையில் முதலமைச்சர், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டார். இது முதலமைச்சரின் தலைமை பண்பை காட்டுகிறது. அவருக்கு விசிக சார்பில் நன்றியை தெரிவித்தோம் என்றார்.

மேலும் கட்சி, சின்னத்திற்கு அப்பாற்பட்டு இந்த தேர்தல் நடைபெற்று உள்ளது என கூறினார்.

எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதலமைச்சர் அறிக்கையே எங்களுக்கு போதுமானதாக இருக்கிறது. வரும்காலங்களில் மறைமுக தேர்தல் இல்லாமல், மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.