" தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க..." - அமைச்சர் சேகர் பாபு

" தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க..." - அமைச்சர் சேகர் பாபு
Published on
Updated on
1 min read

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான பருவக்கால மருத்துவ முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா, உட்பட அதிகாரிகளும் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் கடந்த ஆண்டு மழையால் தத்தளிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீதத்திற்கும் மேல் இந்த ஆண்டு மழை நீர் தேங்கவில்லை. பெரு மழையின் பாதிப்பில் இருந்து காப்பாற்றிய முதல்வரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் பிரச்சனைகளை சரி செய்யும் பணிகளும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய மருத்துவ முகாமில் சென்னையில் 82,000 பேர் பயன் பெற்றுள்ளனர். அடுத்த வரும் மழைக்குள்ளாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 9ம் தேதி பெரு மழை வந்தால் மக்கள் பாதிக்காமல் இருக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடங்களில் மின் மோட்டார்களை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒட்டேரி, கூவம் போன்ற இடங்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் பணி நாளை முதல் தொடங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க ஜாதி மத மோதல் இல்லாமல் இருக்க முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பார் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com