குடியிருப்பு பகுதியில் நாயை வேட்டையாடி செல்லும் சிறுத்தை  

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த நாயை வேட்டையாடி தூக்கிச்செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

குடியிருப்பு பகுதியில் நாயை வேட்டையாடி செல்லும் சிறுத்தை   

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த நாயை வேட்டையாடி தூக்கிச்செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் வெலிங்டன் நல்லப்பன் தெருவில் உள்ள வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த நாயை வேட்டையாடி அலேக்காக தூக்கிச் சென்றுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சி வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிறுத்தை நடமாட்டத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.