விவசாய தோட்டத்திற்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசம் - 11 ஆடுகள் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்திற்குள் சிறுத்தை புகுந்து 11 ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரும்பள்ளம் அணையை ஒட்டிய கெம்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயி ரங்கசாமி என்பவரது தோட்டத்தில் ஆட்டுப்பட்டி வைத்து 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வெளியே வந்த விவசாயி ரங்கசாமி ஆட்டுப்பட்டிக்குள் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இன்று விடியற்காலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ரங்கசாமியின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியதில் பதினோரு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதில் நான்கு ஆடுகளை சிறுத்தை வனப்பகுதிக்குள் தூக்கிச்சென்று விட்டதாக விவசாயி தெரிவித்துள்ளார். சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு வனத்துறையினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் இப்பகுதி விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.