இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் ...என்ன தெரியுமா?

இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் ...என்ன தெரியுமா?

இந்தியாவில் முதன்முறையாக காவல்துறையில் டிஜிட்டல் அவார்டு மற்றும் டோக்கன் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதன் முறையாக டிஜிட்டல் அவார்டு :

இந்திய வரலாற்றில் தமிழ்நாடு போலீசில் முதன் முறையாக டிஜிட்டல் அவார்டு மற்றும் டோக்கன் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்க்காக வழக்கமாக பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் உயர் அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் டிஜிட்டல் அவார்டு (பதக்கம்) மற்றும் டிஜிட்டல் கரன்சி வகை டோக்கன் வழங்கும் முறையை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல்துறையின் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அறிமுகப்படுத்தி சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் அவற்றை வழங்கியுள்ளது.

வருங்கால சந்ததிக்கு பயன் :

சிறப்பாக பணி புரிந்தமைக்காக வழங்கப்படும் வெகுமதி மற்றும் பரிசுப் பொருட்கள் நிலையில்லாதவை என்ற அடிப்படையில் டிஜிட்டல் அவார்டு மற்றும் டோக்கன் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது காலபோக்கில் பெருகி காவல்துறையினரின் வருங்கால சந்ததிக்கும் பயனளிக்கும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு காவல் அதிகாரிகளுக்கு அவார்டு :

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை திருவான்மியூரில் 15 தொன்மையான சிலைகளை ரத்னேஷ் பாந்தியா என்பவரது வீட்டில் இருந்து 15 பழமையான சிலைகள் மீட்கப்பட்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி முத்துராஜா, டி.எஸ்.பி மோகன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், தலைமைக் காவலர் ரீகன் மற்றும் முதல்நிலை காவலர் லக்ஷ்மிகாந்த் ஆகியோருக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி டிஜிட்டல் அவார்டு மற்றும் டோக்கன்களை வழங்கியுள்ளார்.

உலகிலேயே இரண்டாவது முறையாக இந்தியா அறிமுகம் :

டிஜிட்டல் அவார்டு மற்றும் டோக்கன் வழங்கும் முறையை உலகில் முதன்முறையாக துபாய் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தமிழகத்தில் முதன் முறையாக தமிழ்நாடு  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே மீட்கப்பட்ட சிலைகளின் வடிவங்களை வைத்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் உலகிலேயே முதன்முறையாக விர்சுவல் ரியாலிட்டி முறையில் மெய்நிகர் அருங்காட்சியத்தை உருவாக்கிய பெருமையின் தொடர்ச்சியாக உலகிலேயே இரண்டாவது முறையாக காவல் துறையில் டிஜிட்டல் அவார்டு மற்றும் டோக்கன்களை அறிமுகம் செய்துள்ள பெருமையையும் பெற்றுள்ளது.