அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் மாணவர்களை  ஈர்க்கும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதற்காக 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. ஆனால் வரும் கல்வியாண்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த காரணத்தால் கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அரசு பள்ளிகளின் தரத்தினை தமிழக அரசு உயர்த்தியதன் விளைவாக தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் மட்டும் 7 லட்சம் மாணவர்கள் பல்வேறு அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளதாகவும் இதனால் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து செயல்படுத்த பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்ததை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.