இலங்கை கடற்படையின்  தாக்குதலில்  கோட்டைபட்டினம் மீனவர் உயிரிழப்பு: தமிழக மீனவ கிராமங்களில் பரபரப்பு...

இலங்கை கடற்படையின்  தாக்குதலில்  கோட்டைபட்டினம் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்தார் அவரது உடல் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின்  தாக்குதலில்  கோட்டைபட்டினம் மீனவர் உயிரிழப்பு:  தமிழக மீனவ கிராமங்களில் பரபரப்பு...

புதுக்கோட்டையில் உள்ள கோட்டைபட்டினத்தில் இருந்து ராஜ்கிரன், சேவியர் மற்றும் சுகந்திரன் ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்  அப்போது, இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் இந்த  தாக்குதலில் 3 மீனவர்கள் உட்பட படகும் கடலில் மூழ்கினர். பின்னர் இலங்கை கடற்படையினர் சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரை மீட்ட நிலையில், மாயமான ராஜ்கிரனை தேடி வந்தனர். பின்னர் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மாயமான கோட்டைபட்டினம் மீனவர் ராஜ்கிரண் என்பர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீனவர் ராஜ்கிரண் உடலை மீட்டு இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு  இலங்கை கடற்படை கொண்டு சென்றது கடற்படை. ஏற்கனவே மீட்கப்பட்ட சுகந்திரன், சேவியர் மற்றும் கடலில் மூழ்கி உயிரிழந்த ராஜ்கிரண் உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க கடற்படை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படை தாக்குதலில் மீனவர் உயிரிழந்ததால் தமிழக மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படை அத்துமீறலை தடுத்து நிறுத்த மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.