கொங்குல இனி எவருக்கும் பங்கில்ல........திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

கோவையின் முக்கிய பகுதிகளில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்குல இனி எவருக்கும் பங்கில்ல........திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

கோவையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்பது, அரசின் திட்டங்களை வரவேற்பது, எதிர்கட்சியினர் சார்பில் ஒட்டப்படும் நன்றி அறிவிப்பு போஸ்டர்கள், நலத்திட்ட உதவி போஸ்டர்கள் ஆகியவை அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான இரயில் நிலையம், பேருந்து நிலையம், மேம்பாலங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கோவை அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், இரயில் நிலையம் அருகேயுள்ள லங்கா கார்னர் இரயில்வே மேம்பாலம், காந்திபுரம் புதிய மேம்பாலம் பகுதிகளில் மேம்பாலத்தின் தூண்களில் அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது.

இதனிடையே திமுக சார்பில் புதிதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. ‘கொங்குல இனி எவனுக்கும் பங்கில்ல’ என்ற வாசகங்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட பொருப்பாளர்கள்  ஆகியோரின் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.