திருச்சி சூர்யா ஆடியோ சர்ச்சை..! அண்ணாமலையை புழந்து, திமுகவை விமர்சித்த குஷ்பு..!

திருச்சி சூர்யா ஆடியோ சர்ச்சை..! அண்ணாமலையை  புழந்து, திமுகவை விமர்சித்த குஷ்பு..!

திருச்சி சூர்யா, பாஜக பெண் நிர்வாகியிடம் ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வெளியான ஆடியோவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, திமுகவினர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சி சூர்யா:

திமுக எம்பி சிவாவின் மகனான திருச்சி சூர்யா, திமுகவில் இருந்து வெளியேறி கடந்த மே 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் திருச்சி சூர்யா. 

சர்ச்சை ஆடியோ:

திருச்சி சூர்யாவுக்கும், பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையே கட்சியில் பொறுப்புகளை வழங்குவது தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான டெய்சியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சூர்யா,டெய்சியை  நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது. உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு சர்ச்சை ஆடியோ வெளியானது.

இதையும் படிக்க: கட்சி பிரச்சனையில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த காயத்ரி..!

அண்ணாமலை அறிக்கை:

இந்த ஆடியோ தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, சர்ச்சை ஆடியோ குறித்து விசாரிக்க கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும், தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

காயத்ரி - கஸ்தூரி:

பாஜக நிர்வாகி காயத்ரி, சூர்யாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், காயத்ரி ரகுராம் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி 6 மாதம் இடைகாலத் தடை விதித்து அறிக்கை வெளியிட்டார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை. 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகையும் பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி, அந்த ஆடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலென்றென்றால்... அதை விட மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை என பதிவிட்டுள்ளார்.

Kamal's controversy talk: Kasturi, Gayatri Raghuram commented | கமலின்  சர்ச்சை பேச்சு: கஸ்தூரி, காயத்ரி ரகுராம் கருத்து

சிரிப்பு தான் வருகிறது:

இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், நான் வன்மையான கருத்துகளால் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டபோது வாய்மூடி பார்வையாளர்ளாக இருந்தவர்கள் தற்போது என்னிடம் துணிச்சலாக கேள்வி கேட்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. இந்த விவகாரங்களில் தேர்வு செய்து மூளையை குருடாக்கி உள்ளவர்கள் முழுக்க முழுக்க பெண் மீதான வெறுப்புணர்வை கொண்டுள்ளனர். ஒரு பெண்ணுக்காக குரல் கொடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்பது எனக்கு தெரியும். நீங்கள் அனைவரும் அரசியல் நாடகமாடுகிறீர்கள்.

அண்ணாமலைக்கு பாராட்டு:

இந்த விவகாரத்தில் எங்கள் தலைவர், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இறந்த உடலை வைத்து கூட கேவலமான அரசியல் செய்யும் கட்சிகளில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சி. எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடந்த ஆடியோ பேச்சு தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை எடுத்துள்ள நிலைப்பாட்டை பாராட்டுகிறேன். பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துக்கள் எந்த நேரத்திலும் பொறுத்து கொள்ளப்படாது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திமுக பேச்சாளார் சைதை சாதிக் பாஜக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய போது பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் கூட நடைபெற்றது. அதற்கு சைதை சாதிக் மன்னிப்பு கேட்ட பின்பும் அதை ஏற்காத குஷ்பு சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்க் கூறிவருவது குறிப்பிடதக்கது.