ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய கேரள வாலிபர் போக்சோவில் கைது.!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திய கேரள வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய கேரள வாலிபர் போக்சோவில் கைது.!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் பதினோராவது வகுப்பு படித்து வந்தவர் 16 வயது சிறுமி. இதற்கிடையில் அதே பகுதியில் எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வந்த சார்லஸ் என்பவர் அந்த மாணவியிடன் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளார். அதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.   

இதனையடுத்து சிறுமியிடம் நெருங்கிப் பழகிய சார்லஸ், சிறுமியை காதலிப்பதாக சொல்லி கடந்த 9 மாதத்திற்கு முன்பாக கேரள மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர், இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் சிறுமியையும், சார்லஸ் தேடி வந்தனர். 9 மாதங்கள் ஆகியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தனர். இதனை அடுத்து தனிப்படை அமைத்து சூலூர் காவல்துறையினர் சார்லஸை  தேடி வந்தனர்.


இந்நிலையில்  உதவி ஆய்வாளர் ஜான் ரோஸ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நாகர்கோவில் பகுதியில் பதுங்கியிருந்த சார்லஸ் மற்றும் சிறுமியை சுற்றி வளைத்து பிடித்து சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  பின்னர் சார்லஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்