‘வாழ்க்கை வேணும்னா ராணுவத்தில் சேருங்கள்’ - ராணுவ தலைமை தளபதி  

22வது கார்கில் வெற்றி தினத்தை ஒட்டி சென்னை போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

‘வாழ்க்கை வேணும்னா ராணுவத்தில் சேருங்கள்’ - ராணுவ தலைமை தளபதி   

22வது கார்கில் வெற்றி தினத்தை ஒட்டி சென்னை போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்து இந்திய ராணுவம் போரிட்டு வெற்றி பெற்றது. முழுமையாக பாகிஸ்தான் படையை வீழ்த்தி கார்கில் பகுதியில் இந்திய கொடியை நிலைநாட்டிய நாளான இன்று நாடு முழுவதும் ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள், தெற்கு பிராந்திய பகுதியின் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அருண் தலைமையில் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு பிராந்திய பகுதியின் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அருண் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் விதமாக இன்று இங்கு மரியாதை செலுத்தியுள்ளோம். தமிழக இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, வேலை வேண்டுமானால் எந்த கம்பெனியிலும் கிடைக்கும், வாழ்க்கை வேணும்னா ராணுவத்தில் சேருங்கள் என தெரிவித்தார்.