எளிய முறையில் நடைபெற்ற மாங்கனி திருவிழா...

பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

எளிய முறையில் நடைபெற்ற மாங்கனி திருவிழா...
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமர்சியாக நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெற்றது.
 
காரைக்கால் அம்மையாரின்  வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் அவரது திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைத்தனர்.   
 
பக்தர்கள் 12 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் இந்த நிகழ்வுகளை நேரடியாக தங்களின் வீடுகளில் இருந்து காண இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.