கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கடல் சீற்றமும் கனமழையும் பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர்

மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் பலத்த காற்றில் சிக்கிய விசைப்படகு ஒன்று பாரம் தாங்காமல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .
தொடர்ந்து அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்

ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த விசைப்படகுகளும் கரை திரும்பி வருகின்றன.  

 இந்நிலையில், பலத்த காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளனர்.