யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்... 5ம் திருநாள் வரை பக்தர்களுக்கு அனுமதி...

பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்... 5ம் திருநாள் வரை பக்தர்களுக்கு அனுமதி...

முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் நடைபெறும் திருவிழாவானது இன்று காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

கடந்த ஆண்டை போல இந்தாண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 1ம் திருநாள் முதல் 5ம் திருநாள் வரை பக்தர்களுக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு பத்தாயிரம் பேர் வீதம் ஐந்தாயிரம் பேர் ஆன்லைன் புக்கிங் மூலமாகவும், ஐந்தாயிரம் பேர் நேரடியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் பக்தர்கள் அங்கபிரதட்னம் செய்யவோ, தங்கி விரதம் இருக்கவோ, அன்னதானம் வழங்கவோ அனுமதியில்லை. நவம்பர் 9-ம்தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் 10-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் கலையரங்கம், கலையரங்கத்தின் முன்பகுதி, தெற்கு பகுதியிலும் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.