கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி !!

கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும், பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி !!

வழக்குப்பதிவு

கடந்த 1ம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், அவர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

முன்ஜாமின்

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசலில், 

விளக்கம்

கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும், பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, இரு பிரிவினரிடையே பகையை உண்டாக்கும் வகையில் கனல் கண்ணன் பேசியதற்கு ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

தள்ளுபடி

எனவே அவரை கைது செய்து விசாரிப்பது கட்டாயம் என்பதால் கனல் கண்ணனுக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கனல் கண்ணனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.