கமல்ஹாசன் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவருமான கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கமல்ஹாசன் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவருமான கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இதனை தமது டிவிட்டர் பதிவு மூலம் கமல் உறுதிபடுத்தி உள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதாகவும் டிவிட்டர் பதவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்   மருத்துவமனையில்  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ள கமல்ஹாசன், இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.